மலர்களின் ராணி, காதல் சின்னம், அன்பின் வெளிப்பாடு என்று பல அர்த்தங்களைக் கொண்டுள்ள ரோஜாப்பூக்கள் உலக மக்களின் விருப்பமான மலர்களில் ஒன்று.
எல்லோருக்கும் மிகவும் பிடித்த ரோஜாப்பூக்கள் அழகுக்காக மட்டுமன்றி மருத்துவத் தேவைகளுக்கும் பெரிதும் உதவுகிறன. இந்த ரோஜா இதலில் என்னென்ன மருத்துவ பலன் இருக்கு என நாம் இங்கு பார்ப்போம்.
மூல வியாதிக்கு மருந்து
ரோஜா இதழ்கள் மூல நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, மூல நோய் உள்ளவர்கள் ரோஜா இதழ்களை தண்ணீரில் சேர்த்து காய்ச்சி குடித்து வர மூல நோய் விரைவில் குணமாகும்.
வயிற்றுப்போக்கு உதவும்
வயிற்றுப்போக்கால் அவதிப்படுபவர்கள் ரோஜா இதழ்களை நன்றாக கழுவி 1 கைப்பிடி அளவிற்கு நன்றாக மென்று சாப்பிட்டு வர வயிற்றுப்போக்கு நீங்கிவிடும்.
கர்ப்பப்பை வலுப்பெறும்
பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை தொடர்பான நோய்களை போக்குவதற்கு ரோஜா இதழ்கள் மருந்தாக பயன்படுகிறது. ரோஜா இதழ்களை பெண்கள் சாப்பிட்டு வர கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்கும். அதுமட்டுமில்லாமல் உடல் இளமையாகவும் இருக்கும்.
ரத்தம் சுத்தமாக இருக்கும்
ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக அரைத்து கெட்டியான தயிரில் கலந்து காலை வேளையில் சாப்பிட்டு வர ரத்தம் சுத்தமாகும்.
செரிமான பிரச்னை நீக்கும்
ரோஜா இதழ்களை தண்ணீரில் சேர்த்து குடித்து வர செரிமான பிரச்னை விரைவில் நீங்கும்.
மலச்சிக்கல் நீங்கும்
மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் ரோஜா இதழ்களை தண்ணீரில் சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து காலை 1/2 டம்ளர், மாலை 1/2 டம்ளர் என்ற அளவிற்கு குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்னை எளிதில் நீங்கும்.
உடல் எடை குறையும்
ரோஜா இதழ்களை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் எடை குறைகிறது என்று ஆய்வில் கூறப்படுகிறது. எனவே, உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ரோஜா இதழ்களை தண்ணீரில் சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி அதில் சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வர உடல் எடை வேகமாக குறையும்.