யாழில் 750 இலக்கமுடைய பருத்தித்துறை – யாழ்ப்பாணம் வழித்தடத்தில் 29ஸ்ரீ5717இலக்க பஸ்வண்டியில் தவறவிட்ட தங்க நகை பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது பவுண்நகைகள் தோடு மற்றும் மோதிரம் 5000ரூபாய் பணம் ஆகிய கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பயணி பயணம் செய்த தனியார் பேருந்தின் சாரதி நடத்துனர் அதனை கண்டு எடுத்து வடமராட்சி தனியார் பஸ் சேவைசங்கத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த பணம் மற்றும் நகைகளை தவறவிட்டவர் உரிய ஆதாரத்தினை காட்டி பெற்றுக்கொள்ளுமாறு வடமராட்சி தனியார் பஸ் சேவைசங்கம் கூறியுள்ளது.