வாக்களிக்க சென்றுக்கொண்டிருந்த பெண்ணின் மீது ஓட்டோ மோதியதில், காயமடைந்த பெண், டிக்கோயா-கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம், இன்று (21) காலை 10.30 மணியளவில் மஸ்கெலியா- நல்லத்தண்ணி வீதியில் ப்ரௌன்லோ பகுதியில் இடம் பெற்றுள்ளது.
விபத்தில் மஸ்கெலியா குடாமஸ்கெலியா பகுதியில் சென்ற ஜராங்கணி (வயது 61) என்ற பெண்ணே காயமடைந்துள்ளார்
மஸ்கெலியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா -கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.