நுவரெலியா மாவட்டத்தில் இன்று (21) பிற்பகல் 2 மணி வரையான காலப்பகுதியில் 72 வீதமான வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளன. இத்தகவலை நுவரெலியா மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட செயலாளர் நந்தன கலபட தெரிவித்துள்ளார்.
2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக மாவட்டத்தில் மொத்தமாக 6 இலட்சத்து 5,292 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் 534 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இன்றைய தினம் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.