நோர்வேயில், இருந்து ஸ்பெயினுக்கு சென்ற ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் உயிருடன் எலி இருந்ததால் பயணிகள் அச்சமடைந்து கூச்சலிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து விமானம் அவசரமாக டென்மார்க்கில் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் பின்னர் பயணிகள் அனைவரும் வேறு விமானத்திற்கு மாற்றப்பட்டு ஸ்பெயினுக்கு புறப்பட்டனர்.
இச்சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்த விமான நிறுவனம்,
‘பலத்த பாதுகாப்பையும் மீறி இந்த அரிதான நிகழ்வு நடந்துள்ளது. இனி இதுபோன்று நடக்காது’ எனவும் உறுதியளித்துள்ளது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.