சமந்தாவின் அண்ணணான டேவிட் திருமணம் ஜெனிவாவில் நடைபெற்ற நிலையில், இந்த திருமணத்திற்காக சமந்தா சென்றிருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னிலையில் இருக்கும் நடிகை சமந்தாவின் அண்ணணான டேவிட்டின் திருமணம் இனிதே சிறப்பாக முடிந்தது. இந்த திருமணத்தின் போது சமந்தா அண்ணணுக்கு என்ன பரிசு கொடுத்தார் என இணையத்தில் தற்போது செய்திகள் வெளியாகி வருகின்றது.
சமந்தா தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாவார். இவர் சென்னையில் பிறந்து வளந்த தமிழ் நடிகை. இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான தெலுங்கு படமாக யா மாயா சேசாவா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன்பிறகு பானா காத்தாடி என்ற படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு கிடைத்தது. இவர் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தா. ஒரு கட்டத்தில் இவர்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு நடைபெற்ற நிலையில் விவாகரத்தும் பெற்றுக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து சமந்தாவின் அண்ணன் டேவிட் திருமணம், ஜெனிவா உள்ள ஏரியில் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் தனது பெற்றோருடன் சமந்தா கலந்துகொண்டார்.
இந்த திருமணத்தில் அழகிய ஆடையுடன் சமந்தா கையில் பூங்கொத்துடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமந்தா அண்ணணிற்கு கொடுத்த பரிசு பூங்கொத்து தானோ என கருத்து தெரிவித்து வருகின்றனர்.