பொதுவாக வாய் வழி சுகாதாரம் என்பது மிக முக்கியமானதொன்றாக பார்க்கப்படுகின்றது.
பெரும்பாலான மக்கள் பற்களை பராமரிப்பது மட்டுமே வாய் சுகாதாரம் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். மாறாக வாய் வழி சுகாதாரம் எனப் பார்க்கும் பொழுது நாக்கையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
இதனால் தான் மருத்துவர்கள் வைத்தியசாலைக்கு சென்றவுடன் வாயை திறக்கமாறு கூறி பார்ப்பார்கள்.
நாக்கை பார்த்து உங்களின் சுகாதாரத்தை கண்டுபிடித்து விடுவார்கள். வழக்கமாக உங்களுடைய நாக்கை ஒரு நாளைக்கு இரண்டு முறை சுத்தம் செய்ய வேண்டும்.
அந்த வகையில், வாய்வழி சுகாதாரம் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
ஆரோக்கியமான நாக்கு எப்படி இருக்கும்?
சாப்பிடுவது, பேசுவது மற்றும் பிற முக்கிய செயல்பாடுகளில் நாக்கு முக்கிய இடம் பிடிக்கின்றது. ஒரு தசை உறுப்பு, அது நகர்வதற்காக எட்டு தசை ஜோடிகள் இருக்கும். நாவின் மேற்பரப்பு “பாப்பிலா ” எனப்படும் சிறிய புடைப்புகளால் மூடப்பட்டிருக்கும், இது கடினமானதொரு மேற்பரப்பைக் கொடுக்கும்.
பாப்பிலா 200,000-300,000 வரை இருக்கும். இதில் சிறிய பகுதி தான் சுவை மொட்டுக்களாகும். பெரியவர்களுக்கு 10,000 சுவை மொட்டுகள் உள்ளன, இதனை சாதாரண கண்களால் பார்க்க முடியாது. அதிலும் குறிப்பாக அவை நாக்கின் முனை, பக்கங்கள் மற்றும் பின்புறத்தில் குவிந்துள்ளன.
ஆரோக்கியமான நாக்கின் நிறம்
ஆரோக்கியமான நாக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும், அதிலும் சிலருக்கு இருண்ட முதல் வெளிர் இளஞ்சிவப்பு வரை நிறம் நபருக்கு நபர் அவர்களின் ஆரோக்கியத்தை பொறுத்து மாறுப்படும்.
நாக்கின் மேல் ஒரு சிறிய அளவு வெள்ளை பூச்சு இருக்கும். இது சாதாரணம் என்றாலும் அதில் வேறு சில மாற்றங்கள் ஏற்பட்டால் அது நோய்களின் அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.
நாக்கை எப்படி சுத்தம் செய்ய வேண்டும்?
பொதுவாக நாக்கை சுத்தம் செய்ய சுமார் 10-15 வினாடிகள் போதுமானதாக இருக்கும். பல் துலக்கும் போது நாக்கை சுத்தப்படுத்தலாம். இவ்வாறு சுத்தம் செய்வதால் நாக்கில் இருக்கும் தேவையற்ற அழுக்குகள் நீங்கி, நுண்ணுயிரிகள் உருவாகுதல் தடுக்கப்படுகின்றன.