பொதுவாக பெண்களுக்கு கர்ப்பக் காலம் என்பது, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலக்கட்டம்.
இந்த காலகட்டத்தில் ஏற்படும் ஹார்மோன்கள் மாற்றத்தினால் களைப்பு, கோபம், வெறுப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
இதனை பழகிக் கொண்டவர்களுக்கு இதுவொரு பிரச்சினையாக இருக்காது.
அந்த வகையில் கர்ப்பக் காலக்கட்டத்தில் எப்படியான பிரச்சினைகள் ஏற்படும் அதனை எவ்வாறு சரிச்செய்துக் கொள்வது தொடர்பில் தெரிந்துக் கொள்வோம்.
கர்ப்பக் காலத்தில் கவனிக்க வேண்டியவை
கருவுற்று முதல் பன்னிரண்டு வாரங்கள் வரை ஹார்மோன் மாற்றங்கள் தொடரும். இதனால் களைப்பு ஏற்பட்டு அடிக்கடி சோர்ந்துவிடக் கூடும். இந்த மாற்றங்களை மருந்துகளால் குறைக்கவோ கட்டுபடுத்தவோ முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
25 வயதிற்கு முன்னர் கர்ப்பமாக இருப்பவர்களுக்கும் களைப்பைத் தரும் வேலையில் இருப்பவர்களுக்கும் இந்தச் சூழலைக் கையாள்வது மிகவும் சிரமமாக இருக்கும்.
உடல் சோர்வாக இருக்கும் போது பகலில் இரண்டு மணி நேரம் ஓய்வெடுப்பதோடு, தினமும் நாளொன்றுக்குப் பத்துமணி நேரம் கட்டாயமாக உறங்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள் சில சமயம் மனக் கவலையால் சோர்வடைந்து இருப்பார்கள்.
மன அழுத்தம் அதிகரித்தால் குழந்தையை பாதிக்கும் வாய்ப்புகள் காணப்படுகிறது.
ஆகவே மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். கர்ப்பக் காலத்தில் பெண்களிடம் அதிர்ச்சியான தகவல்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும். இதனால் அவர்களுடைய குருதியோட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.