ஈ வீசா கட்டணம் பாரியளவில் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஈ வீசா வழங்கும் நடைமுறை பழைய முறையில் அமுல்படுத்தப்படுகின்றது.
இதன் காரணமாக ஈ வீசா வழங்குவதற்கு அறவீடு செய்யப்படும் கட்டணம் 1.25 டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் 25.77 டொலர்கள் அறவீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதனால் பழைய உள்நாட்டு ஈ வீசா வழங்கும் நடைமுறையினால் பாரியளவில் கட்டணக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீ.எப்.எஸ் க்ளோபல் நிறுவனத்திடம் வீசா விண்ணப்பங்களை கையாளும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதனால் வெளிநாட்டுப் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுப் பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டினால் வீசா கட்டணங்கள் இவ்வாறு பாரியளவில் குறைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, வீ.எப்.எஸ் க்ளோபல் நிறுவனத்திற்கு இவ்வாறு வீசா வழங்குவதற்கு அனுமதி வழங்கியதனால் ஏற்பட்ட பாரியளவு மோசடி குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.