பிரபல டிவி நிகழ்ச்சியில் மிகவும் சிறப்பாக நடந்துகொண்டிருக்கும் சரிகமப நிகழ்ச்சியில் இந்த வாரம் AR ரகுமான் சுற்று ஆரம்பிக்கப்பட உள்ளது. இதில் அனைத்து போட்டியாளர்களும் மெய் சிலிர்த்து போகும் அளவிற்கு பாடியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், கார்த்திக் மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுமே திறமைசாலிகளாக இருக்கின்றனர்.
இந்த வாரம் மூன்றாம் Finalist தெரிவு செய்யப்பட இருக்கின்றனர். தற்போது வெளியாகி உள்ள ப்ரொமொவில் இசையமைப்பாளர் AR ரகுமான் சுற்று இடம்பெறப்போகிறது. இந்த நிலையில் சிறப்பாக பாடிய ஐந்து நான்கு பேருக்கு கோல்டன் பெர்போமன்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதில் ஒருவர் மூன்றாம் Finalist ஆக சிம்மாசனத்தில் அமரப்போகிறார். அந்த வகையில் ஒவ்வொருவரும் அவர்களின் சிறப்பான செயல்திறனை காட்டி வருகின்றனர். இந்த பொட்டியில் யார் தெரிவு செய்யப்படுவார் என்பது மக்களிடையே ஒரு குழப்பாகவே உள்ளது. இதில் தெரிவாகியுள்ள நான்கு பேருமே சிறப்பாக பாடக்கூடியவர்கள்.