ஜெயம் ரவி தனது மனைவி உடனான பிரச்சனையால் தனது அலுவலகம் உட்பட பல விடயங்களை மும்பைக்கு இடம்மாற்றம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார். இவர் தயாரிப்பாளரின் மகளான ஆர்த்தி என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், ஜெயம் ரவி தனது மனைவியை பிரிவதாக சமீபத்தில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தார்.
ஆனால் இந்த முடிவில் தனக்கு விருப்பம் இல்லாதது போன்று மனைவி ஆர்த்தி பதிவு ஒன்றினை வெளியிட்டது ரசிகர்களுக்கு குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்த்தி மற்றும் அவருடைய குடும்பத்தாருக்கு அடிமையாக தான் வாழ்ந்து வந்ததாகவும். கடந்த 15 ஆண்டுகளில் தனக்கென தனியாக ஒரு வங்கிக் கணக்கு கூட தன்னால் தொடங்க முடியவில்லை என்றும் தனது திரைப்பட விடயத்தில் மனைவியின் குடும்பத்தார் அதிக தலையீடு இருந்ததால் இந்த முடிவை எடுத்ததாக ஜெயம் ரவி கூறியிருந்தார்.
ஜெயம் ரவியின் மகன்களும் அவரது அம்மா ஆர்த்தியுடன் தான் இருக்கின்றார்களாம். இந்த பிரச்சனை காரணமாக ஜெயம் ரவி திடீர் முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயம் ரவியின் ஜீனி, காதலிக்க நேரமில்லை மற்றும் பிரதர் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி உள்ள நிலையில், இனி அதிக அளவில் பாலிவுட் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளதாகவும், சென்னையில் உள்ள தனது அலுவலகத்தினை மும்பைக்கு மாற்றம் செய்வதாகவும் கூறப்படுகின்றது.
ஜெயம் ரவி மும்பை சென்றடைந்து அங்கு செய்தியாளர்களிடம் பல விஷயங்களை ஹிந்தியில் பேசும் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது.
பாலிவுட் உலகில் உள்ள தயாரிப்பாளர்களுடன் தான் இணைந்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாகவும், தற்போது தனது அலுவலகத்தை மும்பைக்கு மாற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
#Jayamravi shifted his base city from Chennai to Mumbai now. And he has setup a new office at Mumbai. Also been in talks with Bollywood production houses for upcoming movies 🤝💥 pic.twitter.com/V3NecGFgWB
— AmuthaBharathi (@CinemaWithAB) September 27, 2024