இஸ்ரேலை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்துவதால், மத்திய கிழக்கில் மோதல்கள் அதிகரித்து உலக எரிபொருள் விநியோகம் தடைபடலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதனால் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரெண்ட் மசகு எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 74.40 டொலராக உயர்ந்துள்ளது.
உலகில் எரிபொருள் உற்பத்தியில் ஈரான் 7வது இடத்தில் உள்ளது. இது ஒபெக்கில் (OPEC) மூன்றாவது பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக உள்ளது.
மோதல் மேலும் தீவிரமடைந்தால், Hormuz கடல் வழியாக எரிபொருள் தாங்கிகளின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படக்கூடும் என சந்தை வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
ஈரானுக்கும் ஓமானுக்கும் இடையிலான இந்த கடல் பாதை உலக எரிபொருள் வர்த்தகத்தில் பெரும் பங்களிப்பை அளிக்கிறது மற்றும் உலகின் எரிபொருள் விநியோகத்தில் சுமார் 20% இதன் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
ஏனைய ஒபெக் (OPEC) உறுப்பு நாடுகளான சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் ஈராக் ஆகியவையும் இந்த கடல் வழியை தங்கள் எரிபொருள் போக்குவரத்துக்காக பயன்படுத்துகின்றன.