மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய எலும்பியல் துறை சத்திர சிகிச்சை விடுதிகள் நேற்றையதினம் (12-10-2024) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள் மற்றும் ஏனைய திடீர் விபத்துக்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உயர் தரமானதும் பாதுகாப்பான சத்திர சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில் இந்த சிகிச்சை விடுதிகள் திறக்கப்பட்டுள்ளது.
மேலும், மன்னார் மாவட்டத்தின் மிக நீண்ட கால தேவையாகவிருந்த எலும்பு முறிவு மற்றும் சிகிச்சைக்கான விசேட விடுதிகளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் ஹனிபா திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் எலும்பியல் சத்திர சிகிச்சை விசேட நிபுணர்கள் வைத்திய பி. திலீபன், வைத்தியர் ஆர்.எம்.எம். தீபன்,ஏனைய விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியசாலை அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.