மதுவரித் திணைக்களத்தின் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக இயங்கி வந்த இரவு களியாட்ட விடுதிகளில் இருந்து வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுக்க மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பத்தரமுல்லை மற்றும் தலவத்துகொட ஆகிய பிரதேசங்களில் இஅய்ங்கி வந்த களியாட்டவிடுதிகளே இவ்வாரு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவின் கீழ் பாதுக்க மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அங்கிருந்த மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது 793 லீற்றர் நிறையுடைய மதுபான போத்தல்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.