நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மேலும் 50 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(14) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் கே.ஜி.தர்மதிலக்க இந்த விடயத்தை அறிவித்தார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் உத்தரவுக்கமைய இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.