உக்ரைன் – ரஷ்ய யுத்தத்தில் ரஷ்யாவிற்கு ஆதரவளிக்கும் வகையில், வட கொரியாவிலிருந்து 3,000 இராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், வட கொரியாவின் இராணுவ வீரர்கள் ரஷ்யாவில் களமிறக்கப்பட்டுள்ளதை ஆதாரங்கள் வெளிப்படுத்துவதாக அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் லொய்ட் ஒஸ்டின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த வட கொரிய இராணுவத்தினர் ரஷ்யாவிற்கு ஆதரவாக போரிடத் தொடங்கினால் அது பெரிய ஆபத்தை விளைவிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, யுத்தத்தில் வட கொரியாவின் செயற்பாட்டை உன்னிப்பாக அவதானிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் 10,000 வட கொரிய படையினர், உக்ரைனுக்கு எதிரான போரில் இணையலாம் என நம்புவதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி அறிவித்திருந்தமை குறிப்பிடத்க்கது.