கனடாவின் ஒன்றாரியோ மாகாண மக்களுக்கு அரசாங்கம் மகிழ்ச்சி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. எரிபொருளுக்கான வரி சலுகையை நீடிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி எரிபொருளுக்காக அறவீடு செய்யப்படும் 5.7 வீத வரி சலுகை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையில் நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் தலைமையிலான அரசாங்கம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் கோடை காலம் வரையில் வரி சலுகை அமுலில் இருக்கும் என முதல்வர் போர்ட் அறிவித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்த வரி சலுகை நடைமுறையில் உள்ளது.
இந்த வரி சலுகையின் மூலம் மக்கள் பெருமளவு நன்மையை பெற்றுக்கொள்ள முடியும் என மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது.