பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரிய பிரச்சினையாக வெடித்த ரெசிபி தான் தேங்காய் சம்மந்தி.
இதுவொரு கேரளா பக்கம் பிரபலமான ரெசிபியாகும். கேரளா மக்கள் சம்மந்தி என அழைக்கப்படுவது தமிழில் துவையல் என அழைப்பார்கள். இந்த சம்மந்தியை சூடான சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
அந்த வகையில், பிக்பாஸ் வீட்டில் ஒரு பெரிய பூகம்பத்தை கிளப்பிய கேரளா சம்மந்தி எப்படி செய்து என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
கேரளா சம்மந்தி
தேவையான பொருட்கள்
* தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் – 2
* வரமிளகாய் – 10
* புளி – 1 எலுமிச்சை அளவு
* தேங்காய் – 1 (துருவியது)
* கறிவேப்பிலை – 1 கொத்து
* இஞ்சி – 1/2 இன்ச்
* சீரகம் – 2 டீஸ்பூன்
* கல் உப்பு – 1 டீஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், வரமிளகாய், புளி சேர்த்து வதங்க விடவும்.
பச்சை வாசம் போகும் வரை வதக்கி எடுக்கவும்.
பின்னர் கலவையை சற்று நேரம் குளிர வைத்து விட்டு சுத்தமான மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும். அதனுடன் துருவிய தேங்காய், கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.
முடிந்தவரை நீர் சேர்க்காமல் அரைத்தால் சுவையாக இருக்கும்.
இறுதியாக அரைத்த கலவையை கையால் எடுத்து உருண்டையாக பிடித்து சூடான சாதத்துடன் வைத்து பரிமாறினால் சுவையான தேங்காய் சம்மந்தி தயார்!