அசைவ பிரியர்களுக்கு பிடித்த காடை வறுவல் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அசைவ பிரியர்களின் உணவுப்பட்டியலில் முக்கியமாக இருப்பது காடை ஆகும். அதிக கொழுப்பு இல்லாமல் இருக்கும் காடையை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.
காடையை ஒரே மாதிரியாக சமைக்காமல் வறுவலாக செய்தால் சிறியவர் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். தற்போது காடை வறுவல் எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருள்
காடை – 4
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 2 ஸ்பூன்
தயிர் – 2 ஸ்பூன்
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் காடையை நன்றாக கழுவி, அகலமான பாத்திரம் ஒன்றில் சேர்த்து அதனுடன் எலுமிச்சை சாறு, தயிர், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
மசாலா நன்றாக தடவி இதனை ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும். பின்பு கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
எண்ணெய் நன்றாக சூடானதும் அதில் காடை துண்டுகளை ஒவ்வொன்றாக போட்டு பொரித்தெடுக்கவும். தற்போது சுவையான காடை பொரியல் தயார்.