இலங்கையின் முன்னணி அரச நிதி நிறுவனமான இலங்கை வங்கியின் (BOC) புதிய தலைவராக திரு.காவிந்த டி சொய்சா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, நேற்றைய (05-11-2024) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை வங்கியின் புதிய தலைவராக காவிந்த டி சொய்சா கடமையாற்றவுள்ளார்.
காவிந்த டி சொய்சா 30 வருடங்களுக்கும் மேலான தொழில் அனுபவமும் 25 வருட நிர்வாக அனுபவமும் கொண்ட தொழில் வங்கியாளர் ஆவார்.