பொதுத் தேர்தலில் இதுவரையில் வெளியான முடிவுகளின்அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது.
இதுவரையில் தேசிய மக்கள் சக்தி ஐந்து மில்லியன் வாக்குகளுடன் 44 ஆசனங்களை கைப்பற்றிள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி இதுவரையில் 1.5 மில்லியன் வாக்குக்ளுடன் 11 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி இரண்டு ஆசனங்களையும், இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஐக்கிய ஜனநாயக முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி என்பன தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
தற்போதைய நிலவரத்தின் பிரகாரம் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.