சர்ச்சைக்குள்ளான 2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மூன்று வினாக்களுக்கு இலவச புள்ளிகள் வழங்கப்படும் என உயர் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளின் மூன்று வினாக்கள் சமூக ஊடகங்களில் வெளியான நிலையில் அது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து, இது தொடர்பில் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், குறித்த ந்த மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மனு எதிர்வரும் 11ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.