மியான்மரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மியான்மரில் இன்று காலை 6.30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
முன்னதாக, மியான்மரில் கடந்த நவம்பர் மாதம் 26-ம் திகதி 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.