ரஷ்ய (Russia) துருப்புக்களுக்கு எரிபொருள் விநியோகத்தின் முக்கிய ஆதாரமாக இருக்கும் எண்ணெய் நிலையத்தை உக்ரைன் (Ukraine) டிரோன்கள் மூலம் தாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவின் ஓரியோல் பிராந்தியத்தில் உள்ள Steel Horse எனப்படும் எண்ணெய் உற்பத்தி கட்டுப்பாட்டு நிலையத்தை குறிவைத்து உக்ரைனிய ஆளில்லா விமானங்கள் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த எண்ணெய் நிலையம் உக்ரைன் எல்லையிலிருந்து சுமார் 170 கிமீ தொலைவில் உள்ளதுடன் இந்த தாக்குதலில் பெரும் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டாலும், எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என ரஷ்யாவின் ஓரியோல் மாகாண ஆளுநர் ஆண்ட்ரே கிளிச்கோ தெரிவித்துள்ளார்.
மேலும் ,உக்ரைனின் இராணுவ நடவடிக்கைகள் ரஷ்யாவின் எண்ணெய் நிலையங்களை தாக்கும் நோக்குடன் செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைனின் இந்த தாக்குதலால் ரஷ்யாவின் எண்ணெய் விநியோகத்தில் தாக்கம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு ,குறித்த தாக்குதலின் போது 11 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.