மாத்தறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று தருவதாக கூறி பலரிடம் பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவரை ஹக்மன பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த மோசடி தொடர்பில் ஹக்மன பொலிஸாருக்கு கிடைத்த 09 முறைப்பாடுகள் தொடர்பில் கிண்ணியா பொலிஸ் பிரிவில் சந்தேக நபர் நேற்று (14-12-2024) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 36 வயதுடைய புஹுல்வெல்ல பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர் சுமார் 4.3 மில்லியன் ரூபாவுக்கு மேல் மோசடி செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.