கொடகவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிசோகொட்டுவ பகுதியில் தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து மகன் தாக்கியதில் தாய் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்றையதினம் (15-12-2024) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் கல்பாய, பல்லேபெத்த பகுதியைச் சேர்ந்த 82 வயதுடைய தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் குறித்து நீதவான் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதுடன், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கொடகவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.