இலங்கையில் பதிவுத் திருமணம் செய்வதற்காக வருகை தரும் புலம்பெயர் தமிழர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற வேண்டும் என்ற நிர்பாந்திப்பதால் பல்வேறு அசோகரிகங்களை எதிர்கொள்வதால் அதனை நீக்குமாறு பதிவாளர் சங்கத்தின் இணைப்பாளர் வேலுப்பிள்ளை தவச்செல்வம் கோரிக்கை விடுத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ராஜபக்சக்களின் ஆட்சியில் இலங்கையில் எப் பாகத்திலும் இல்லாத நடைமுறை தமிழ் மக்கள் மத்தியில் தினிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு சுத்தம் காரணமாக பலர் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து சென்ற நிலையில் அவர்கள் தமது பிரதேசங்களில் திருமணம் செய்ய வரும்போது பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற வேண்டும் என்ற நடைமுறை தொடர்ந்தும் பேணப்பட்டு வருகிறது.
தமிழ் மக்களின் திருமண சடங்கை பொறுத்த வரையில் நாள் நட்சத்திரம் முகூர்த்த நேரம் பார்த்து பதிவு திருமணம் செய்வது வழமையான செயற்பாடு.
ஆனால் வெளிநாடுகளில் இரந்து வருகை தரும் தமிழ் மக்கள் இலங்கையில் திருமணம் செய்வதாயின் 14 நாட்களுக்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சு அனுமதிக்காக சில விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அனுமதி கிடைத்தாலும் பதிவுத் திருமணத்தை செய்ய முடியும் இந்த நடைமுறை தமிழ் மக்களுக்கு மட்டும் தினிக்கப்பட்ட ஒரு நடைமுறை.
பதிவு திருமணத்திறகாக வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் உறவுகள் தமக்கு கிடைக்கப்பெற்ற சிறு விடுமுறை காலத்தை பயன்படுத்தி திருமணத்துக்காக இலங்கை வருகினாறனர்.
இன் நிலையில் இலங்கையில் பெண்ணையோ ஆணையோ பதிவுத் திருமணம் செய்வதாயின் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் தமிழருக்கென பாதிப்பு திருமணத்தில் தேவையற்ற தலையீடுகளை செய்யாது பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை நீக்க ஆவணம் செய்ய வேண்டும்.
நாங்கள் அறிந்த வரையில் உலகில் எங்கும் இல்லாத நடைமுறை இலங்கையில் அதுவும் தமிழருக்கென இறுக்கமான நடைமுறைகளை பின்பற்றுவது ஒரு இனத்தை அடக்குவதாகவே பார்க்கிறோம்.
ஒரே நாட்டில் வாழும் இனங்களுக்கு இடையில் பாரபட்சமான நடைமுறைகளை அரசாங்கம் பேனுவது இன ஒற்றுமையில் விரிசலை ஏற்படுத்துகிறது.
ஆகவே குறித்த படி அந்தொடர்வில் யாழ்ப்பாணம் விஜயம் செய்த இலங்கை பதிவாளர் நாயகத்திடமும் குறித்த விடயம் தொடர்பில் பேசியுள்ளோம் விரைவில் புதிய ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.