யாழ் மாவட்டத்தில் 2025 வெள்ள அனத்தத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் முகமாக சுமார் 255.2 மில்லியன் ரூபாக்கான 23 திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ் மாவட்டத்தில் வெள்ள அனத்தம் ஏற்படக்கூடிய பகுதிகள் என அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளை மக்களுக்கு ஆபத்து ஏற்பட வண்ணம் அபிவிருத்தி செய்வதற்காக 23 திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இம்முறை 2024 யாழ் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புக்கள் மற்றும் கடந்த கால பாதிப்புகளை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வு மூலம் குறித்த திட்டங்கள் மாவட்ட அனத்த முகமைத்து பிரிவினரால் தயாரிக்கப்பட்டது.
குறித்த திட்டங்களுக்கான அனுமதியை மாவட்ட அபிவிருத்திக் குழு வழங்கியுள்ள நிலையில் எதிர்வரும் வருடம் 2025 ஆம் ஆண்டு ஒதுக்கீட்டுக்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு அனுப்பி வைக்கப் படும் என அவர் மேலும் தெரிவித்தார்