நாட்டில் உள்ள வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த தமக்கு எதிராக 19 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் (18-12-2024) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினரான இராமநாதன் அர்ச்சுனா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் எனவும் அவர்களுக்கான நெஞ்சில் சூடு வாங்கவும் தயார் எனவும் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.