அமெரிக்காவின் மாநிலமாக கனடா ஒருபோதும் மாறப்போவதில்லை என ஒன்றாயோ மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 51-வது மாநிலமாக கனடா மாற வேண்டும் என்று அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் தெரிவித்திருந்தார்.
சமூக ஊடகம் வாயிலாக அவர் இந்த கருத்தினை வெளியிட்டு இருந்தார். எவ்வாறு எனினும் இந்த கருத்து தொடர்பில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பெருமைமிகு கனடியர்கள் எப்பொழுதும் கனடியவர்களாகவே இருக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தனது கெடுபிடிகளை அதிகரித்தால் ஒன்றாரியோவில் இருந்து கனடிய மாநிலங்களுக்கு விநியோகம் செய்யும் மின்சாரம் துண்டிக்கப்படும் என அவரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நியூயோர்க், மிச்சிகன் மற்றும் மினசோட்டா போன்ற மாநிலங்களுக்கு ஒன்றாரியோவில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படுகின்றது.
இவ்வாறான ஒரு பின்னணியில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இறுதி கட்டமாக இவ்வாறு மின்சாரத்தை துண்டிக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என டக் போர்ட் தெரிவித்துள்ளார்
இதேவேளை, கனடியர்களுக்கு தங்களை பார்த்துக் கொள்ள தெரியும் எனவும் எந்த ஒரு நாட்டினதும் மாநிலமாக மாறவேண்டிய அவசியம் கிடையாது எனவும் பிரபல நடிகர் மைக் மெயர்ஸ் தெரிவித்துள்ளார்.