கனடாவின் மேற்கு கியூபெக் பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 4.1 ரிச்டர் அளவில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடிய நில அதிர்வு நிறுவனம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தை ஒட்டோவா மற்றும் கேடின்யூ ஆகிய பகுதிகளிலும் உணர முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நில அதிர்வு காரணமாக சேதங்கள் ஏதும் ஏற்பட்டு இருக்காது என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
5 ரிச்ட்ர் அளவிற்கு மேற்பட்ட நில அதிர்வுகளினால் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் சில இடங்களில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.