இலங்கை வந்த மியன்மாரின் ரோகிங்யாபுகலிடக்கோரிக்கையாளர்களை நாடு கடத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் முல்லைத்தீவு கடற்பரப்பிற்கு வந்து சேர்ந்த ரோகிங்யா புகலிடக்கோரிக்கையாளர்களைநாடு கடத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
மியன்மார் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை
அது தொடர்பில் சட்டரீதியான நடைமுறைகள் கலந்துரையாடல்களை மேற்கொண்ட பின்னர் இது குறித்து தீர்மானிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை வெளிவிவகார அமைச்சு மியன்மார் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதுதாகவும், இலங்கையில் உள்ள ரோகிங்யா புகலிடக்கோரிக்கையாளர்களின் பெயர் விபரங்களை ஏற்கனவே மியன்மார் அரசாங்கத்திடம் கையளித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகள் முடிவடையும் வரை அவர்கள் இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருப்பார்கள் எனவும் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார்.