கிளிநொச்சி கோணாவில் மத்தியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்றையதினம் (2) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
அந்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது கிளிநொச்சி முறிப்பு குளத்தின் தடுப்பு அணையில், காணாமல் போன நபரின் துவிச்சக்கர வண்டியும், அவரது பாதணியும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த நபர் குளத்தில் விழுந்துள்ளாரா என்ற சந்தேகத்தில் நீச்சல் வீரர்கள் மூலம் குளத்தில் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.
அதேவேளை தேடும் நடவடிக்கைகளுக்காக கடற்படையினரின் உதவியையும் நாடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.