கடற்படை அதிகாரியாக இருந்த யோஷித ராஜபக்ச, எவ்வாறு சொத்துக்களை சேர்த்தார் என்பது குறித்து விசாரிப்பதற்காகவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டார் என தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஊழல் குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கதிர்காமத்தில் உள்ள யோஷித ராஜபக்சவிற்கு சொந்தமான காணி ஒன்றின் உரிமம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காகவே யோஷித குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரித்து உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காகவே தூய்மையான இலங்கை(Clean Sri Lanka) வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐன்ஸ்டீன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இலங்கையில் இருந்து சொத்துக்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தால் அவற்றை மீள பெறுவதற்கு அமெரிக்கா உதவ உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.