இந்தியாவின் 76ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதற்கமைய இன்று காலை 8.30க்கு கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் கொடியேற்றம் மற்றும் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
அத்துடன், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் குடியரசு தின செய்தியும் வாசிக்கப்படவுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் கண்டியிலுள்ள துணை உயர்ஸ்தானிகராலயங்களிலும் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















