இலங்கை போக்குவரத்து சபையின் தலைவராக செயற்பட்டு வந்த ரமால் சிறிவர்தன தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.
ரமால் சிறிவர்தன இலங்கை போக்குவரத்து தலைவராக இரண்டு தடவைகள் செயற்பட்டுள்ளதோடு கடந்த ஆண்டு அமைச்சர் விஜித ஹேரத்தினால் இவருக்கான நியமனம் வழங்கப்பட்டது.
தற்போது அவர் பதவி விலகியிருப்பதை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன உறுதிப்படுத்தியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் அரச நிறுவனமொன்றின் தலைவர் ஒருவர் பதவி விலகுவது இது இரண்டாவது சந்தர்ப்பமாகும்.
முன்னதாக, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் செனேஷ் திஸாநாயக்க தனது பதவியிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.