தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் (NHDA) பணிப்பாளர் சபையின் தலைவர் பதவியில் இருந்து என்.பி.எம்.ரணதுங்க (N.B.M. Ranatunga ) பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரணதுங்க பதவி விலகியமைக்கான கடிதம் அதற்கு பொறுப்பான அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இவர் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
அதன்படி, 3 மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்த அவர், தனது பதவி விலகலுக்கான காரணங்களை விளக்கி நீண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் உயர் பதவியில் இருந்து விலகிய மூன்றாவது நபர் இவர் ஆவார்.
இந்த வார தொடக்கத்தில், இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) தலைவர் ரமல் சிறிவர்தனவும் பதவி விலகினார்.
கடந்த மாதம், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் (SLRC) தலைவர் பதவியில் இருந்து செனேஷ் திசாநாயக்க பண்டாரவும் பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது.