முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் சுசந்த சில்வாவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
2014 ஆம் ஆண்டு பிங்கிரிய மற்றும் பன்னால பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதாகக் கூறி 6.1 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட இந்த குழுவினருக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டது.
சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்தில் கொண்ட நீதிமன்றம், சந்தேக நபரை தலா 500,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டது.
சம்பவம் தொடர்பான முறைப்பாட்டை மே மாதம் 6 ஆம் திகதி மீண்டும் அழைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.