கடன் அட்டைகளுக்கு 28 சதவீதத்திற்கும் அதிகமான வட்டி விகிதங்களை வணிக வங்கிகள் வசூலிப்பதாக தெரியவந்துள்ளது.
இதே வேளையில், இலங்கை மத்திய வங்கியும் நிதி அமைச்சகமும் இந்த விவகாரத்தில் மௌனம் காப்பதால் 1.9 மில்லியனுக்கும் அதிகமான கடன் அட்டை வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம், மத்திய வங்கி அதன் கொள்கை வட்டி விகிதத்தை 8 சதவீதத்தால் பராமரிக்க முடிவு செய்தது.
வங்கி வைப்பு
மற்ற வங்கிகளும் நிதி நிறுவனங்களும் சில நேரங்களில் வங்கி வைப்புகளுக்கு 6 – 7 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
அவ்வாறான நிலையில் கடன் அட்டைகளுக்கு 28 சதவீதத்திற்கும் அதிகமான வட்டி விகிதங்களை அனுமதிப்பது அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்திற்கான பொதுமக்களின் ஆதரவை குறைக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




















