அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்தில் 102 விஷ பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வீட்டிலிருந்த ஒரு நாயைப் பாம்பு கடித்ததை அடுத்துத் தேடிய போது இந்தப் பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பாம்புகள் சிவப்பு நிற கழுத்துடன் கருப்பு தோல் போன்ற வடிவத்தில் உள்ளன.
இந்த விஷ பாம்புகள் அங்கு உள்ள ஒரு தேசிய பூங்காவில் விடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.