கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 24.02.2025 அன்று மாலை 06.30 மணியளவில் கர்ப்பிணிப் பெண்ணொருவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன் போது குளுக்கோஸ் ஏற்றிக் கொண்டிருந்த போது தாதியர்கள் அதனை கவனிக்காமல் இருந்ததனால் அதன் நேரத்தை கடந்து அதிகமான இரத்தம் வெளியேறியுள்ளது.
தாதியர்களின் கவனமின்மையினாலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.