காலி – ஹினிதும பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிங் கங்கையில் இன்று(14) நீராடிக்கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக ஹினிதும பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் அக்மீமன மற்றும் பொத்தல ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 38 மற்றும் 49 வயதுடைய இருவரே காணாமல்போயுள்ளனர்.
காணாமல்போன இருவரும் உறவினர் வீடொன்றுக்கு சென்றுள்ள நிலையில் உறவினர்களுடன் இணைந்து கிங் கங்கையில் நீராடிக்கொண்டிருந்த போது நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹினிதும பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், காணாமல்போனவர்களை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.