ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மட் சாலி நழீம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தவதாக அறிவித்துள்ளார்.
கட்சியின் தீர்மானத்திற்கு அமைவாக தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாகவும், நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் ஏறாவூர் நகரசபை வேட்பாளராக களமிறங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சற்றுமுன்னர் நாடாளுமன்றில் உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மட் சாலி நழீம் இதனைத் தெரிவித்தார்.