சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினியின் மாமா அண்ணாமலை வீட்டிற்கு வந்து உண்மைகளை உடைத்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
ரோகினி தனது வாழ்க்கையில் நடந்த உண்மையை மறைந்து வாழ்ந்து வரும் நிலையில், அதில் மலேசியா மாமா குறித்த உண்மை மட்டும் தற்போது அம்பலமாகியுள்ளது.
மீனா வீட்டில் என்னதான் மாமியாரால் கொடுமை அனுபவித்தாலும், சிறந்த மருமகளாக அனைவரையும் அனுசரித்து செல்கின்றார்.
தற்போது நடைபெற்ற திருமண விழாவின் மூலம் மலேசியா மாமாவின் உண்மை முத்துவிற்கு தெரிந்துள்ளது. மேலும் முத்து மணியை வீட்டிற்கு அழைத்து வந்து உண்மையை கூறியுள்ளார்.
அப்பொழுதும் ரோகினி தான் தப்பித்துக் கொள்வதற்கு ஓவராக நடித்துள்ள நிலையில், இறுதியில் மலேசியா மாமாவே அனைத்து உண்மையையும் கூறுகின்றார்.