மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் எரிவாயுக் குழாய்க் கசிந்ததால் விண்ணை முட்டும் அளவுக்கு பெரும் தீ ஏற்பட்டுள்ளது.
சுபாங் ஜயா வட்டாரத்திலுள்ள Putra Heights குடியிருப்புப் பகுதியில் இன்று (1 ஏப்ரல்) காலை 8 மணியளவில் தீ மூண்டது.
எரிவாயுக் குழாய்க் கசிவால் மூண்ட தீயில் 33 பேர் காயமடந்த நிலையில் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்க்ப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது
சில வீடுகளுக்கும் தீ பரவியதில் சிலர் வெளியேறமுடியாமல் சிக்கிக்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ள நிலையில், தீயணௌப்பு வீரர்கள் தீயை அணிக்க போராடி வருவதாகவும் தெரிவிக்கபப்டுள்ளது.