ஹைலேண்ட யோகட் விலையை நேற்று (01) முதல் 10 ரூபாவினால் குறைப்பதற்கு மில்கோ பால் மா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஹைலேண்ட் யோகட் ஒன்றின் விலை புதிய விலை 70 ரூபாய் என்று மில்கோ நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை மேலாளர் சம்பத் குணரத்ன தெரிவித்துள்ளார்.
அதோடு மில்கோவால் உற்பத்தி செய்யப்படும் திரவ பால் பொருட்களின் விலைகளும் பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், குறைக்கப்பட்டுள்ளதாக மேலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், முன்னதாக 225 ரூபாய்க்கு விற்கப்பட்ட 450 மில்லி லிட்டர் நீண்ட நாள் பயன்படுத்தக் கூடிய திரவப் பாலின் விலை குறைக்கப்பட்டு 200 ரூபாயாக பதிவாகியுள்ளது.