நாசா (NASA) விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், தனது தந்தையின் சொந்த நாடான இந்தியாவுக்கு விரைவில் செல்ல திட்டமிட்டுள்ளார்.
பயணத்தின் போது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை (இஸ்ரோ) சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒன்பது மாதங்கள் விண்வெளியில் தங்கியிருந்தபோது, ஒவ்வொரு முறையும் தனது விண்கலம் இமயமலையை கடந்து செல்லும் சந்தர்ப்பத்தில், இந்தியாவின் அதிசயத்தை பார்த்ததாக அவர் கூறியுள்ளார்.
விண்வெளியில் தனது அனுபவத்தை இஸ்ரோவுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும், சக ஜனநாயக நாடான இந்தியா விண்வெளித் துறையில் கால் பதித்திருப்பது குறிப்பிடத்தக்கது என்றும் வில்லியம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
விண்வெளிப் பயணத்திற்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் பிரவேசித்த சுனிதா வில்லியம்ஸ், தான் பயணித்த விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் 09 மாதங்கள் மையத்தில் சிக்கிக் கொண்டார்.
அதன் பிறகு அமெரிக்காவின் சிறப்பு விண்வெளிப் பயணத்தின் மூலம் மீண்டும் பூமியை அடைந்தமை குறிப்பிடத்தக்கது.