காசா பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவமானது நேற்று (3) காசா நகரத்தின் புறநகர்ப் பகுதியான துஃபாவில் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் மேலும் 70 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என காசா சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ள இஸ்ரேலியர்களை விடுவித்து, காஸாவை விட்டு வெளியேறும் வரை போரை மேலும் தீவிரப்படுத்துவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அத்தோடு, ஒரு மாதத்திற்கும் மேலாக காஸாவுக்குச் செல்லும் உணவு, எரிபொருள், உதவிகள் ஆகியவற்றை இஸ்ரேல் தடுத்தி நிறுத்தி வைத்துள்ளது.
இது தவிர காசாவின் பிற பகுதிகளில் நேற்று இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதல்களில் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.