மட்டக்களப்பில் பல முக்கிய பிரபலங்கள் அங்கத்துவம் வகிக்கும் மிகப்பழமையான சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பாரிய நிதி மோசடி ஈடுபட்ட நபர்கள் ஆதாரங்களுடன் பிடிபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல வருடங்களாக தொடர்ச்சியாக நிறுவனத்தின் பெயரில் ஒரு திருட்டு வங்கிக்கணக்கை நடத்தி அதன் மூலம் பல மில்லியன் ரூபாய் பணத்தை மோசடி செய்து கொண்டிருந்த பிரபல தனியார் வங்கியின் முன்னாள் முகாமையாளரும் அதன் முன்னாள் பிராந்திய முகாமையாளரும் ஆதாரங்களுடன் பிடிபட்டதாக நம்பகமான தகவல்கள் மூலம் தெரிய வருகிறது.
இந்த நபர்களில் ஒருவர் ஏற்கனவே குறித்த வங்கியிலும் பல தடவைகள் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டவர் என்பதும் பலரும் அறிந்த விடயமாகும். வங்கி கடன் மற்றும் பல தேவைகளை முடித்துக்கொடுப்பதற்காக பலவிதமான இலஞ்சங்களை பெற்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.
அதில் பா..யல் இலஞ்சமும் ஒரு வகையாகும் இதற்காக ஊர் மக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டது பொத்துவில் மக்கள் அறிந்ததே.இது தொடர்பாக தெரியவருவதாவது,

பணம் மீளப்பெறலுக்கான முதலாம் மற்றும் இரண்டாம் கையொப்பம் இரு ர எழுத்துக்களை ஆரம்ப எழுத்தாக கொண்ட இருவர் ஆகும். இவர்கள் ஒற்றுமையாக செயற்பட்டதால் இது உறுப்பினர்களுக்குத் தெரியவரவில்லை.
தற்போது நிர்வாகம் மீளமைக்கப்பட்போது தொண்டு நிறுவனத்திற்கு இரண்டு வங்கி கணக்குகள் இயங்குவது தெரியவந்துள்ளது. இது தொடர்பில் ஆரம்ப உள்ளக புலனாய்வின் போது மோசடி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது இதற்கு ஆதாரமாக முதலாவது அதே இரு ர எழுத்துக்களை ஆரம்ப எழுத்தாக கொண்ட இருவர் கையொப்பமிட்டு வங்கிக்கணக்கு மூடப்பட்டு விட்டது.
தற்போது உண்மையான கணக்கு மட்டுமே செயற்படுகிறது. இரண்டாவது, விளக்கம் கோரிய போது நடந்தது உண்மைதான் இதை பெரிதுபடுத்த வேண்டாம் என கூறி தங்களுக்கு சலுகை கோருகின்றனர்.
மறுபக்கமாக நிறுவன உறுப்பினர்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்தி தப்பிக்க முயற்சி நடக்கிறது. ஆதலால் இவ்வாறான சதிவலைக்குள் கற்றோர் அங்கத்தவர்களாகக் கொண்ட சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனம் சிக்கக் கூடாது.
உறுப்பினர்களின் உழைப்பினையும் நன்கொடைகளையும் சூறையாடியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும் பல மில்லியன் ரூபாய் பணத்தை மோசடி செய்து ஏழை மக்களுக்குச் சேர வேண்டிய வாழ்வாதார உதவிகளை கொள்ளையடித்த பணத்தை மீளப்பெற நடவடிககை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்கள் குரலாக ஓலிக்கிறது.