கம்பஹா (Gampaha) பேருந்து நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று (15) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள், சிறிய லொறி ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில், குறித்த லொறியில் பயணித்த இருவரும் வாகனத்தில் இருந்து இறங்கி அருகிலுள்ள கடைக்கு ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.